மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
எல்லையில்லா காதலுடன் விராட் கோலி: 6வது திருமண நாளின் அசத்தல் கிளிக் இதோ.!
கடந்த 2017ம் ஆண்டு இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலியும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகருகிறது. இருவரின் அன்புக்கு அடையாளமாக அழகிய பெண் குழந்தையும் பெற்றெடுத்தனர். இருவரும் தங்களின் இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பதாக பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விராட் கோலி தனது மனைவியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் பொருட்டு, திருமண நாளான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் இருவரும் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
— Virat Kohli (@imVkohli) December 12, 2023