வில்லன் நடிகர் ரகுவரனின் மகனா இது.! வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!?Villan actor raguwaran son photo viral at social media

தமிழ் திரை துறையில் வில்லன் நடிகராக பெயர்பெற்று ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரகுவரன். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் பேச்சு திறமையால் வில்லன் கதாபாத்திரத்தை கூட ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பு திறமைக்கும், டயலாக் பேசும் அழகிற்கும் இன்றுவரை ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.

Raguvaran

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ரகுவரன்  சினிமா கல்லூரியில் சேர்ந்த நடிப்பதற்கான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். முதன்முதலில் 'ஏழாம் மனிதன்' என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரகுவரன், தனது நடிப்பு திறமையின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இவர் வில்லனாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடல் தோற்றம், பார்ப்பவர்களை மிரட்டும் தோனியிருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றியவர் ரகுவரன் தான். இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக இருக்கும்போதே சக நடிகையான ரோகினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Raguvaran

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரகுவரன் 2008 ஆம் வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்தது. இதுபோன்ற நிலையில் ரகுவரனின் மகன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரகுவரனின் மகனா இது? அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கிறாரே என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றன.