விஜய் பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? வேதனையுடன் கண்ணீர் விட்டு கதறும் அவலம்!!

விஜய் பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? வேதனையுடன் கண்ணீர் விட்டு கதறும் அவலம்!!


vijayalakshmi-stuggling-without-house

தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் தமிழில் ராமச்சந்திரா, மிலிட்டரி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயலட்சுமி சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் பணமின்றி சிரமத்தில் உள்ளதாகவும் உதவி கேட்டு கோரிக்கை வைத்திருந்தார்.

 இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில்,பெங்களூருவுக்கு நடிக்க வந்தேன். மேலும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன். 

vijayalakshmi

பின்னர் உடல்நிலை மோசமான நிலையில் இரு மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தேன். மேலும் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்ட நிலையில் கன்னட நடிகர் ரவிபிரகாஷ் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிகிச்சைக்கு உதவி செய்தார். பின்னர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அவர் மீது புகார் அளித்தேன்.அனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ் பெண் என்பதால் என்னை மிகவும் நிராகரிக்கின்றனர். இங்கு நான் மிகவும் சிரமத்தில் உள்ளேன். தங்குவதற்கு கூட வீடு  இல்லாமல் எனது தோழி வீட்டில் தங்கி உள்ளேன். நான் இங்கிருந்து வெளியேற வேண்டும், எனது கடனை அடைக்க வேண்டும் அதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.