சினிமா

மகள் என்று கூட பார்க்காமல் எனது அப்பா அதை செய்தார்!. நடிகர் விஜயகுமாரை பற்றி உண்மையை போட்டுடைக்கும் வனிதா!.

Summary:

மகள் என்று கூட பார்க்காமல் எனது அப்பா அதை செய்தார்!. நடிகர் விஜயகுமாரை பற்றி உண்மையை போட்டுடைக்கும் வனிதா!.


சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.

தனது அம்மாவுக்கு சொந்தமான சென்னை ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து தன்னை அடித்து துரத்திவிட்டதாக வனிதா கூறியுள்ளார். தனது அம்மாவுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார் என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

எனது அப்பா நிறைய விஷயங்களில் பழி சுமத்தியிருக்கிறார். தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துக்கொண்டார். அவர்களை சினிமாவில் நடிக்கவைக்கவில்லை.

         

நல்லபடியாக சம்பாதித்து கொடுத்து தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துள்ளார். அருண் விஜய்யை மட்டும் சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால், இரண்டாவது மனைவியான எனது அம்மா மஞ்சுளாவுக்கு பிறந்த எங்களை சினிமாவில் நடிக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளார்.

நான் வீட்டினை அபகரித்துவிட்டேன் என என்மீது புகார் கொடுத்தார் என்றால் இது ஒரு கேவலமான குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்த நானும் செத்துபோகவேண்டும், எனது அப்பா விஜயகுமாரும் செத்துபோகவேண்டும்.

எனது அம்மா உண்மையாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் அந்த அளவுக்கு உண்மையாக இல்லை. எனது அம்மாவிடம் பணத்தினை வாங்கி அவரது முதல் மனைவியிடம் கொடுத்து வந்தார்.

எனது அண்ணன் அருண் விஜய், என்னிடம் பணியாற்றியவர்களிடம் மோதுகிறார், தில் இருந்தால் அவர் என்கிட்ட மோதவேண்டும். அருண் ஒரு குற்றவாளி. பணத்திற்காக அவன் அப்பாவின் பின்னால் திரிகிறான் என கூறியுள்ளார்.
 
மகள் என்று கூட பார்க்காமல் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தினார் எனது தந்தை. இவர் படுத்திய கொடுமையினால் தான் எனது அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என குமுறலுடன் கூறியுள்ளார் வனிதா.


Advertisement