இறுதிச்சடங்குக்கு கூட பணமில்லாமல் தவித்த நடிகை குஞ்சரம்மாளின் குடும்பம்.. யாருக்கும் தெரியாமல் பணத்தை அனுப்பிய விஜயகாந்த்..!!Vijayakanth helps actress kunjarammal

தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற அந்தஸ்தோடு இன்று வரை உச்ச நடிகராக வலம் வருபவர் விஜயகாந்த். இவர் திரைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தமிழக மக்கள் அறிந்தது.  

தமிழ் சினிமா

கருப்பு எம்.ஜி.ஆர் என்று போற்றப்படும் விஜயகாந்த் இயலாதோருக்கும், தன்னுடன் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் பாகுபாடு இன்றி நல்லது செய்வார் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். 

கேப்டனை பற்றி அவரது நண்பர் மற்றும் நடிகரான மீசை ராஜேந்திரன் யூடியூப் சேனல்களில் பல தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் பேசிய வீடியோவில், "பல நடிகர்களின் கண்ணீரைத் துடைத்தவர் விஜயகாந்த். 

தமிழ் சினிமா

தமிழ் திரையுலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த குஞ்சரம்மாள். அவர் இறந்த சமயத்தில் அவரின் இறுதிச்சடங்கு செய்யக்கூட பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவிர்த்தனர். இந்த தகவலை அறிந்த விஜயகாந்த் அவரின் குடும்பத்தினரிடம் பேசி யாருக்கும் தெரியாமல் பணத்தை அனுப்பி அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்" என்று தெரிவித்தார்.