சினிமா

அனல்பறக்கும் தளபதி 65.! படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.!

Summary:

நடிகர் விஜய்யின் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிர்கள் மத்தியில

நடிகர் விஜய்யின் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக நடிகர் விஜய் ரஷ்யா செல்ல இருப்பதாகவும்தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement