கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
டும் டும் டும்.. காதலியை கரம்பிடித்த விஜய்டிவி புகழ்..! இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ..! குவியும் வாழ்த்துகள்..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி பிரபலமானவர் தான் புகழ். இவர் குக் வித் கோமாளி சீசன் 2-ன் முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன்பின்னர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இவரது நடிப்பில் "zoo keeper" என்ற படமும் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னதாக தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக போட்டோஷூட் நடத்தி கேப்ஷனில் புகழ் கூறியிருந்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி புகழ் மற்றும் பென்சியா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் இன்று உண்மையாக விஜய் டிவி புகழுக்கு பெற்றோரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதால் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.