உண்மை அறியாமல் விபரீத முடிவெடுத்த மீனா: மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் மெகா விரிசல்.!

உண்மை அறியாமல் விபரீத முடிவெடுத்த மீனா: மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் மெகா விரிசல்.!



vijay-tv-pandian-stores-24-sep-2023-promo

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 

கடந்த சில வாரமாகவே சூழ்ச்சியில் சிக்கிய ஜனார்த்தனனை மருமகன் ஜீவா எச்சரித்து கொண்டு இருந்த நிலையில், அதனை கேட்காது ஜனார்த்தனன் பிரசாந்தின் வலையில் சிக்கி தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 

pandian stores

இந்நிலையில், தற்போது மீனா தனது தந்தையின் நிலைக்கு கணவர் ஜீவா மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என எண்ணி பொய்யான தகவலை காவல்துறையினரிடம் வாக்குமூலமாக பதிவு செய்தார். 

இந்த தகவலை கேட்டுக்கொண்ட மீனா, உண்மை என்னவென்பதை கூட அறியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் இருந்து தனது குழந்தையுடன் தாய்-தந்தை வீட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதனால் அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பலரையும் பதைபதைக்க வைக்கப்போகிறது.