அடேங்கப்பா.. விஜய் டிவியின் அசத்தலான புதிய அவதாரம்! பேரே சும்மா டக்கரா இருக்கே! வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா.. விஜய் டிவியின் அசத்தலான புதிய அவதாரம்! பேரே சும்மா டக்கரா இருக்கே! வைரலாகும் வீடியோ!!


vijay-tv-new-channel-vijay-takkar-will-started-soon

தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து தற்போது தமிழகத்தில் டாப் சேனல்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி. விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் மற்றும் மக்களை கவர்ந்து திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.  இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு எனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தொலைக்காட்சியின் அங்கங்களாக சூப்பர் விஜய், விஜய் மியூசிக் போன்ற சேனல்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கூடுதலாக புதிய சேனல் ஒன்று உருவாக உள்ளது. அதற்கு விஜய் டக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேனல் துவங்கப்பட உள்ளது. அதன் ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.