சினிமா

ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமர்! மீண்டும் இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

Summary:

Vijay tv fame ramar casting with sanjana kalraani

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள், பாடகர்கள், குணசித்ர நடிகர்கள் என பலரை விஜய் தொலைக்காட்சி தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்துள்ளது. சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் கலக்க போவது புகழ் ராமர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து ராமர் செய்த நகைச்சுவை அவரை ஒரே இரவில் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது.

என்னமா இப்படி பண்றீங்களேம்மா, போலீஸைக் கூப்புடுவேன், ஆத்தாடி என்ன உடம்பி இப்படி இவர் செய்த காமெடிகளுக்கு அளவே இல்லை. இவருக்காகவே ராமர் வீடு, சகல vs ரகள போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பிவருகிறது.

இந்நிலையில் புது படம் ஒன்றில் ஹீரோவாக களமிறங்க உள்ளார் விஜய் டிவி ராமர். இப்படத்தை குறும்பட இயக்குனர் மணி ராம் என்பவர் இயக்க உள்ளார். மேலும் கே.தினேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கவுள்ளார். 

படத்தில் ராமருக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்க உள்ளார். என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒற்றை வீடியோ மூலம் பிரபலமான ராமர் தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement