சினிமா

அதுக்கே 7 வருசமாச்சு! தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் டிவி தீனா!

Summary:

மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து கேலி செய்த நெட்டிசன்களுக்கு விஜய் டிவி புகழ் தீனா பதிலடி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம்  மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. மேலும் இப்படத்தில் விஜய் டிவியில் அனைவரையும் கலாய்த்து பெருமளவில் பிரபலமான தீனா ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தீனா மாஸ்டர் படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதனைக் கண்ட நெட்டிசன் ஒருவர்,டேய் வந்ததே 7 செகன்ட் தானடா என்று கேலியாக கமெண்ட் செய்ய, அதற்கு தீனா, எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்த படத்துல 7 செகண்ட் வர்றதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சு என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Advertisement