என்னங்கடா டிரஸ் இது? விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யை கலாய்க்கும் ரசிகர்கள்!

என்னங்கடா டிரஸ் இது? விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யை கலாய்க்கும் ரசிகர்கள்!


Vijay tv dd different costume from beach

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடமாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படுபவர் திவ்ய தர்ஷினி. நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது மட்டும் இல்லாது ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் டிடி. இவரது கலகலப்பான பேச்சு, திறமை டிவி பார்க்கும் அனைவரையும் வெகுவாக ஈர்க்கும். பல்வேறு வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் டிடி.

சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும், இவரது நண்பருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

dd

அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும். இதையடுத்து, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் பாட்டியா பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்டார் டிடி.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

dd