சினிமா

அட விஜய் டிவி புகழா இது! சுருட்டை முடி ஹேர் ஸ்டைலை மாற்றி செம மிரட்டலாக மாறிட்டாரே! தெறிக்கவிடும் புகைப்படங்கள்!

Summary:

விஜய் டிவி நடிகர் புகழ் தனது சுருட்டை முடி ஹேர் ஸ்டைலை மாற்றி மிரட்டலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இவர் கலகலப்பாகவும், தன்னை தாழ்த்திக் கொண்டும் காமெடி செய்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தார். அதுவும் பெண் வேடமிட்டு இவர் செய்யும் காமெடிகள் அட்டகாசம்.

இவ்வாறு தனது காமெடி திறமையால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் புகழ் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கோமாளியாக இவர் ரம்யா பாண்டியனிடம் செய்யும் அலப்பறைகள் அனைவரையும் ரசிக்க வைத்தது. இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் காமெடி கிங்காக வலம் வரும் புகழுக்கு அடையாளமே அவருடைய சுருட்டையான தலைமுடிதான். 

 இந்த நிலையில் புகழ் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அத்தகைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் புகழ் தற்போது தனது அழகான கர்லிங் முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்து,  கருப்பு உடையில் செம ஸ்டைலாக, மிரட்டலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

 

அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, அதனை கண்ட ரசிகர்கள் புகழா இது?  நம்பவே முடியலையே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement