பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு.. "நெனச்சு கூட பாக்கல., இப்படி ஆகும்னு" - சோகத்தின் உச்சத்தில் நடிகை சுஜா வருணி, சிவகுமார்..!

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு.. "நெனச்சு கூட பாக்கல., இப்படி ஆகும்னு" - சோகத்தின் உச்சத்தில் நடிகை சுஜா வருணி, சிவகுமார்..!


vijay-tv-biggboss-jodi-dance-varun-bhavani

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதுவரையிலும் பிக்பாஸின் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசன் தொடங்கி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி கடந்த வருடத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வருடமும் கோலாகலமாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆரம்பத்திலிருந்து நடனத்தில் கலக்கி வந்தவர்கள் அமீர், பாவனி மற்றும் சுஜா, சிவகுமார். 

தற்போது இவர்கள் இருவரும் தான் பிக்பாஸ் ஜோடிகளின் இரண்டாவது சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சுஜாவருணி மற்றும் சிவகுமார் நிகழ்ச்சி முடிந்த கையோடு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்கள். அதில் "பேய் - கடவுள் ரவுண்டில் நடனமாடிய போது, சுஜா கீழே விழுந்துவிட்டார். 

vijay tv

அவரை அறியாமலேயே சில உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன்பிறகு தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவரும் சுஜா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார். இதனால் எனக்கு மகிழ்ச்சி தாங்க இயலவில்லை. அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடனநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

vijay tv

 

இந்தநிலையில் தான் சுஜா விற்கு திடீரென பிளீடிங்காக ஆரம்பித்தது. அப்போது மருத்துவரிடம் கேட்டபோது கரு கலைந்துவிட்டது என்றார். இதனால் மிகவும் மனமுடைந்து விட்டேன்" என சிவகுமார் சோகத்துடன் இந்த விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.