சினிமா

என்னப்பா..புது பிசினஸா!! குதிரை வண்டிகாரனாக மாறிய குக் வித் கோமாளி பாலா! எப்படி கூவிகூவி அழைக்கிறார் பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சி ஏராளமான கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களது திறமையை ஊக்குவித்து முன்னேற

விஜய் தொலைக்காட்சி ஏராளமான கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களது திறமையை ஊக்குவித்து முன்னேற வைத்து வருகிறது. இந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் கலைஞராக இருப்பவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான அவரது கேலியான பேச்சும், கிண்டலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்த நிலையில் பாலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் ரகளைகள் செய்தார். அதிலும் டைமிங்கில் கொடுக்கும் ரைமிங் கவுண்டர்கள், பிறரை கலாய்ப்பது என அவரது அட்ராசிட்டிகள் வேற லெவல். அதனைத் தொடர்ந்து பாலாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இந்தநிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் பாலா அவ்வப்போது ஏதேனும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் அவர் தற்போது குதிரை வண்டியில் அமர்ந்து, குதிரை வண்டிக்காரனாக மாறி கஸ்டமர்களை அழைப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் என்ன பாலா இப்படி மாறிட்டீங்களே என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement