த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
உனக்கு காபி ஒரு கேடா?.. ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஈஸ்வரி.. கடுப்பில் கோபி..! வைரல் ப்ரோமோ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில் குடும்பப்பின்னணி மற்றும் பாசப்பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி, தனது மனைவி ராதிகாவுடன் முன்னாள் மனைவி மற்றும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் இல்லத்திற்குள் வந்துவிடுகிறார்.
இது இவர்களுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது ராதிகா மற்றும் ஈஸ்வரி இடையேயான வாதங்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி நிர்வாகம் தற்போது வெளியிட்ட நிலையில் அந்த ப்ரோமோவில், ராதிகா தனது கணவருக்காக காபி போட்டு எடுத்துச்செல்ல அவரை கழுத்தை பிடித்து நெரித்து ஈஸ்வரி வெளியே தள்ளி விடுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ராதிகாவின் தாயார் காவல்நிலையத்தில் சென்று புகாரளித்து காவலர்களை உடன் அழைத்து வந்து பிரச்சனை செய்கிறார். மேலும் இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.