விஜய் டிவி பிரபலத்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? வெளியான தகவல்கள்!

விஜய் டிவி பிரபலத்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? வெளியான தகவல்கள்!


vijay-tv-andrews-sad-life-story

சினிமாவை விட தொலைக்காட்சிகளின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களின் மோகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. மக்களை கவர்வதற்காக தொலைக்காட்சிகளும் நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகள், தொடர்கள் என வழங்கி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று ரெடி ஸ்டெடி போ. இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஆண்ட்ருஸ் தொகுத்து வழங்கி வருகின்றனர். ரியோ பற்றி அனைவர்க்கும் ஏற்கனவே தெரியும். தொகுப்பாளர் ஆண்ட்ருஸ் நிகழ்ச்சியில் எப்போதும் கலகலப்பாக இருப்பார்.

vijay tv

இந்நிலையில் கடந்த வாரம் இவரது மனைவி மற்றும் மகன் இருவரும் இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஆண்ட்ருஸ் மனைவி, தனது கணவரின் கடந்த கால வாழ்க்கை பற்றி பேசினார். திருமணத்திற்கு பிறகு மதுரையில் சிறிதாக பிஸ்னஸ் தொடங்கியுள்ளார் ஆண்ட்ருஸ். அந்த சமயம் அவரது அண்ணன் மற்றும் அக்கா இருவரும் வேறு வேறு சம்பவத்தில் மரணமடைய குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

vijay tv

தனது குடும்ப உறவுகளை அந்த சோகத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காகவும், அவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் தான் செய்த பிசினஸை விட்டுவிட்டு ரேடியோவில் RJ வாக பணிக்கு சேர்ந்துள்ளார் ஆண்ட்ருஸ். அதன்பின்னர் செய்தி வாசிப்பாளர், விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு இப்படி ஒவொரு நிகழ்ச்சிகளாக கலந்துகொண்டு தனது குடும்பத்தை பெரும் துயரத்தில் இருந்து மீட்டுள்ளார் ஆண்ட்ருஸ்.

இந்த சோக கதையை ஆண்ட்ருஸ் மனைவி வீடியோவில் கூறியபோது ரெடி ஸ்டெடி போ மேடையில் இருந்த அனைவரும் கண்ணீரில் மூழ்கினர்.