500 ரூபாய் கூட இல்லாத நபர் இன்று இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்! யார் தெரியுமா?

Vijay thevarakonta selected in top 30 famous persons forbes


vijay-thevarakonta-selected-in-top-30-famous-persons-fo

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் விஜய். தமிழ், தெலுங்கு என இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் முன்னணி நாளிதழான ஃபோர்ப்ஸ் இந்தியா, இந்திய அளவில் பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 30 இந்திய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் விஜய் தேவரைகொண்டவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Vijay theverakonta

இதனை முன்னிட்டு 5 வருடங்களுக்கு முன்பு தனது வாழக்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய். அதில், எனக்கு 25 வயதாக இருந்தபோது நான் கணக்கு வைத்திருந்த ஆந்திரா பேங்கிலிருந்து உங்க கணக்குல ரூ.500 மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கணக்கை முடக்கப்போகிறோம் என்று செய்தி அனுப்பியிருந்தார்கள்.

அதைப் பார்த்த என் அப்பா, ‘மகனே 30 வயசுக்குள்ள பணம் சம்பாதிச்சு செட்டில் ஆனதாண்டா வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் இருக்கு’ என்றார். இன்று எனது 30வது வயதில் அதை சாதித்திருப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார்.