சினிமா

போட்டு தாக்கு.. தளபதி 65 அப்டேட்: ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Summary:

விஜய் அடுத்த படத்தில் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் அடுத்த படத்தில் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கேஜிஎப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது காதாபாத்திரம் ஏறக்குறைய துப்பாக்கி படத்தில் வரும் விஜய் போன்று இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement