Pandian Stores: தம்பிக்காக பிரசாந்தின் சட்டையைப்பிடித்த மூர்த்தி; அனலாய் கொதித்த அண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த சம்பவம்.. வீடியோ உள்ளே.!

Pandian Stores: தம்பிக்காக பிரசாந்தின் சட்டையைப்பிடித்த மூர்த்தி; அனலாய் கொதித்த அண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த சம்பவம்.. வீடியோ உள்ளே.!



Vijay Television

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர், பல ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்றுள்ள தொடர் ஆகும். இதற்கு ரசிகர்களாக தமிழ்நாட்டின் பல குடும்பங்கள் இருக்கின்றன. தற்போது வரை சுவாரசியமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரம் ஒளிபரப்பாகும் காட்சிகளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தனலட்சுமியின் இல்லத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சியில், ஜனார்த்தனன் சின்ன மருமகன் பிரசாந்த், ரூ.25 இலட்சம் முதலீடு செய்யச்சொல்லி ஜனார்தனனை வற்புத்துகிறார். 

vijay tv

இதில் விருப்பம் இல்லாத மூர்த்தியின் தம்பி ஜீவா, எனக்கு விருப்பம் இல்லை. பணம் முதலீடு செய்ய வேண்டாம் என கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், ஜீவாவின் சட்டையை பிடித்துவிடுகிறார். இதனை மூர்த்தி நேரில் பார்த்து, எனது தம்பியின் சட்டையை எப்படி பிடிப்பாய்? என ஆவேசமாய் கத்துகிறார். 

ஜனார்த்தனன் வழக்கம்போல தனது இளைய மருமகனுக்கு ஆதரவாய் பேசி, மீனாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்கான ஆதரவை கண்டித்தார். இதனால் வரும் வாரத்தில் ஜீவா தனது மாமனாரின் வீட்டில் இருந்து புறப்பட்டு அண்ணனுடன் ஒன்று சேருவரா? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.