சினிமா

விஜய்யின் மகனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர்..! விஜய்க்கு கொடுத்த ஹிட் போல் கொடுப்பாரா.?

Summary:

Vijay son Sanjay to make his debut in Tamil cinema with Murugadoss

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார் விஜய். படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த பட்டியலில் பிரபல இயக்குனர் முருகதாஸும் இணைந்துள்ளார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த முருகதாஸ், விஜய்யின் மகன் சஞ்சைக்காக ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும், சஞ்சய்யை நடிக்கவைக்க விஜய்யை அணுகியதாகவும் பிரபலம் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

ஆனால், மகன் படிப்பு விஷயத்தில் உறுதியாக இருக்கும் விஜய்  தன் மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் களம் இறக்கவுள்ளதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தில் அறிமுகமானது போல் விஜய்யின்  மகன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement--!>