தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
விஜய் சேதுபதியை ஏமாற்றிய வெற்றிமாறன்.. என்ன காரணம் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?
தமிழ் கோலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பட்டாலும் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறி தற்போது தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு வெற்றி படங்களை அளித்து வருகிறார்.
விஜய் சேதுபதி முதன் முதலில் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். இதன் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, செக்க சிவந்த வானம், ஆண்டவன் கட்டளை, கவன், இமைக்கா நொடிகள், றெக்க, புரியாத புதிர், சூது கவ்வும், தர்மதுரை போன்ற பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.
சமீபத்தில் கமலஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வந்தது. இதற்குப்பின் 'விடுதலை' திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி வெற்றிமாறனை குறித்து பேசி இருக்கிறார். வெற்றிமாறன் ஷூட்டிங் என்று அழைத்துச்சென்று எட்டு நாட்களும் ஆடிஷன் மட்டுமே வைத்து அனுப்பி தன்னை ஏமாற்றி விட்டதாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி உள்ளது.