அடேங்கப்பா.. இவ்வளவா?? வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பவம் எவ்ளோ பார்த்தீங்களா!! வேற லெவல்தான்!!

அடேங்கப்பா.. இவ்வளவா?? வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பவம் எவ்ளோ பார்த்தீங்களா!! வேற லெவல்தான்!!


Vijay sethupathi salary in web series

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து, பின் குறுகிய காலகட்டத்திலேயே தனது கடின உழைப்பால், முயற்சியால் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 விஜய் சேதுபதி எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று மிகவும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவதாரம் எடுத்து பல டாப் நட்சத்திரங்களின் திரைப்படங்களில் மிரட்டி வருகிறார். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

vijay sethupathi

மேலும் நடிகர் விஜய் சேதுபதி வெப்சீரிஸிலும் நடித்து வருகிறாராம். அதற்கு அவர் படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக கமிட்டான விஜய் சேதுபதி அதற்கு சம்பளமாக ரூ 35 கோடி வரை பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.