சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு இப்படியொரு மாஸ் தலைப்பா? பட்டையை கிளப்பும் படபோஸ்டர் இதோ!!

Summary:

vijay sethupathi next movie poster released

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமாகி தனக்கென ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மேலும் அவர் தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி,  மாமனிதன், உப்பென்னா, ரணசிங்கம்,  ஓ மை கடவுளே, தளபதி 64,  இடம் பொருள் ஏவல்,லாபம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,அமலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி க்கான பட முடிவு

இந்நிலையில் வெங்கடகிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவரது 33வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக மேகாஆகாஷ் மற்றும் வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் நடிக்க உள்ளனர்.


 
 


Advertisement