மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக ஜெய்ப்பூரில் இருந்து அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படம்!

Vijay sethupathi mourn to spb


vijay-sethupathi-mourn-to-spb

நடிகர் விஜய் சேதுபதி தற்போது அனபெல் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் அப்படத்தில் அவருடன் டாப்ஸி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் நாட்டையே பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

vijay sethupathi

இந்தநிலையில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மற்றும் படக்குழுவினர்கள் அங்கேயே எஸ். பி.பாலசுப்ரமணியன் அவர்களின்   உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

vijay sethupathi