சினிமா

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் விஜய் சேதுபதி! அதுவும் எந்த ஹீரோவுக்கு பார்த்தீர்களா!

Summary:

நடிகர் விஜய் சேதுபதி நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  குறுகிய காலத்திலேயே தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்ற விஜய் சேதுபதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
அவரது கைவசம் தற்போது  கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) என ஏராளமான படங்கள் உள்ளன. 

ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி பின் வில்லனாக அவதாரம் எடுத்து ரஜினியின் பேட்ட மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டியுள்ளார். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சலார் படத்தில் நடிகர் பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்க  வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement