சினிமா

உடல் எடை குறைந்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறிய விஜய் சேதுபதி! புகைப்படம் உள்ளே!

Summary:

Vijay sethupathi latest look photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவரது நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றிவரும் விஜய் சேதுபதி சமீப காலமாக உடல் எடை சற்று கூடி, பார்ப்பதற்கு வயதான தோற்றத்திலும், சற்று குண்டாகவும் காட்சியளித்தார். மேலும், இவரது நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களும் சரிவர ஓடவில்லை.

இந்நிலையில் துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் தனது உடல் எடையை குறித்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement