தமிழில் வேற லெவலில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ்... படத்தின் வில்லன் இவர்தானா... அப்ப படம் செம மாஸ் தான்!!
தமிழில் வேற லெவலில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ்... படத்தின் வில்லன் இவர்தானா... அப்ப படம் செம மாஸ் தான்!!

தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் முருகதாஸ். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு பெருமளவில் கட்டியிழுக்கும். ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் அஜித் நடிப்பில் உருவான தீனா படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழில் வேற லெவலில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். அதாவது பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.அப்படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.