என்ன.. இப்படி சொல்லிட்டாரே.! மனஅழுத்தம் வந்தால் இதைதான் செய்வேன்! செம ஓபனாக போட்டுடைத்த விஜய் சேதுபதி.!

என்ன.. இப்படி சொல்லிட்டாரே.! மனஅழுத்தம் வந்தால் இதைதான் செய்வேன்! செம ஓபனாக போட்டுடைத்த விஜய் சேதுபதி.!


vijay-sethupathi-habits-while-having-depression

தமிழ் சினிமாவில் சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி பின்னர் தனது தீராத உழைப்பால், கடின முயற்சியால் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் விஜய் சேதுபதி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் ஏற்று அசத்தலாக நடிக்கக் கூடியவர்.

விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவதாரம் எடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனியார் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது விஜய் சேதுபதியிடம், மன அழுத்தம் வந்தால் என்ன செய்வீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், முதலில் தூங்கிவிடுவேன். அல்லது புகைப்பிடிப்பேன், பின் சரக்கு அடிச்சுட்டு படுத்து தூங்கிடுவேன் என செம ஜாலியாக பதிலளித்துள்ளாராம்.