"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
அட அட.. வேற லெவல்தான்! நடிகர் விஜய்சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்! செம குஷியான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னேறி தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய்சேதுபதிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் களமிறங்கி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட, விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் பயங்கர வில்லனாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இவரது கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளன.
இதற்கிடையில் கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலையால் அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இத்தகைய மெகா கூட்டணி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில்
சைரா நரசிம்மா ரெட்டி மற்றும் உப்பென்னா என்ற படத்தில் ஹீரோயின் தந்தையாக, வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.