அடேங்கப்பா.. கமலின் விக்ரம் படத்தில் வில்லனாகும் ரசிகர்களின் பேவரைட் ஹீரோ! யாருன்னு பார்த்தீர்களா! வேற லெவல்தான்!!

அடேங்கப்பா.. கமலின் விக்ரம் படத்தில் வில்லனாகும் ரசிகர்களின் பேவரைட் ஹீரோ! யாருன்னு பார்த்தீர்களா! வேற லெவல்தான்!!


vijay-sethupathi-going-to-act-as-villain-to-kamal-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம்வரும் கமல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 232வது படமாகும். இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதன் முதல்கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளதாகவும், கொரோனா தாக்கம் குறைந்த பிறகு படப்பிடிப்பு துவங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

kamalஇந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.