இவ்வளோ நாட்கள் கழித்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி! என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை நடிகராகா சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதுமட்டும் இல்லாமல் 96 திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 96 படத்தை தொடர்ந்து பேட்ட, சீதக்காதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் 96 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பிரேம்குமார்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படி ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனரை கௌரவிக்கும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி அந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவெண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போது 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துவருகிறார் பிரேம்குமார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க, த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார்.