96 பட இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்சேதுபதி.! அது என்ன தெரியுமா?



vijay-sethupathi-gave-surprise-gift-to-96-director

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனை அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் குறுகியகாலத்தில் தனது முயற்சியாலும் , கடின உழைப்பாலும்  தற்போது  விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்து விட்டார் .

வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள்தான்.மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. 

vijay sethupathi

இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் விஜய்சேதுபதி மக்களிடையே பெரிதும் பிரபலமானார்.

இந்நிலையில் புல்லட் பிரியரான விஜய் சேதுபதி 96 பட இயக்குனர் பிரேம் குமாருக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவெண்ணையும் வாங்கி கொடுத்து விஜய்சேதுபதி இயக்குனர் பிரேம்குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.