சினிமா

திரையுலக வெளிச்சமே இல்லாமல் இருக்கும் விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா..? இணையத்தில் தீயாய் பரவு வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Vijay sethupathi family photo goes viral

தமிழ் சினிமவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் இன்று தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோ என்று சொன்னால் அது மிகையாகாது.

தற்போது தளபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. மேலும், லாபம் என்ற படத்திலும் நடித்துவருகிறார். பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வெளியுலகில் மிகவும் பிரபலமாவது வழக்கம்.

அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவது வழக்கம். ஆனால், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியில் வருவது இல்லை,

இந்நிலையில், விஜய் சேதுபதி தனது மகன் சூரியா சேதுபதி, மகள் ஸ்ரீஜா சேதுபதி மற்றும் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement