மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
இதுதான் விஜய் சேதுபதி வாங்கிய புது பைக்கா? என்ன விலை தெரியுமா? புகைப்படம்!

ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.
தற்போது மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் போன்ற அப்படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில் விஜய் சேதுபதி புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம் பற்றிய செய்தியும், புகைப்படமும் வைரலாகிவருகிறது.
விஜய்சேதுபதி ஒரு புதிய BMW பைக் வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் மூன்றரை லட்சம் ருபாய் என்று சொல்லப்படுகிறது. இன்று அவர் ஷோரூமுக்கு சென்று பைக்கை வாங்கியுள்ளார். அதன் புகைபடங்களை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.