விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்.! நடந்தது என்ன.?



vijay sethupathi attacked in airport

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வருகிறார் என்பதுகுறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் விமான நிலையத்தில் சென்று கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் எட்டி உதைப்பது போலவும், இதனால் விஜய் சேதுபதி தடுமாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த திடீர் தாக்குதலை விஜய் சேதுபதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாக தமிழர்களை அவமதிக்கும் விதமாக செயல்களில் ஈடுபட்டதால் தாக்கியதாக இணையத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டது. ஆனால் தாக்குதல் நடத்திய இளைஞர், விஜய் சேதுபதி தூண்டுதலின்பேரில் விமானநிலையத்தில் வைத்து ரசிகர்கள் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜய்சேதுபதியின் உதவியாளர் தான் தாக்கப்பட்டுள்ளார் என தற்போது  தெரியவந்துள்ளது.