வீட்டின் வெளியே ஏதோ கேட்ட சத்தம்...! வெளியே வந்த பார்த்த பாட்டி.... நொடியில் வந்து உயிரைப் பறித்த எமன்...! நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி...!!!!
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்தார். நஜ்முன்னிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அவர், சனிக்கிழமை மாலை வீட்டின் வெளியே வந்தபோது எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளானார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டி
வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டதைத் தொடர்ந்து நஜ்முன்னிசா பேகம் வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த குரங்கு திடீரென அவர் மீது பாய்ந்தது. இதில் நிலைதடுமாறிய மூதாட்டி கீழே விழுந்தார். தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: பிச்சை எடுத்த மூதாட்டியின் வீட்டை திறந்தவர்களுக்கு மூளையில் காத்திருந்த பேரதிர்ச்சி! உறவினர்கள் செய்த அந்த ஒரு காரியம்....!!!
சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்
நடந்த குரங்கு தாக்குதல் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. நஜ்முன்னிசா கீழே விழுந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மற்றொரு முதிய பெண் வெளியே ஓடி வந்தார். அவரையும் குரங்கு தாக்க முயன்றது பதிவில் தெரிகிறது.
மக்கள் திரண்டதால் தப்பியோடிய குரங்கு
இதையடுத்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். மக்கள் திரண்டதும் குரங்கு அங்கிருந்து தப்பி ஓடியது. நொடிகளில் நடந்த இந்த தாக்குதலில் 91 வயது மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், குரங்குகளின் நடமாட்டம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொப்பள் மாவட்டம் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Koppal – A 91-year-old woman died after a monkey attacked and pushed her outside her house in B.T. Patil Nagar, Koppal district, Karnataka. The incident was captured on CCTV. pic.twitter.com/uAs5fY1SkG
— NextMinute News (@nextminutenews7) September 22, 2026
இதையும் படிங்க: தவறை தடுக்க போன காவலருக்கு நடந்த கொடுமை..! ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு... நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!!