சினிமா விளையாட்டு

படமாகிறது பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு! புதிய அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி

Summary:

Vijay sethupathi as muthiah muralidharan

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

இலங்கையிலுள்ள கண்டியில் 1972-ம் ஆண்டு பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி-20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக விளையாடியவர். சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். 

இந்நிலையில் '800' என்ற பெயரிலேயே முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்படவுள்ளது. இந்த படத்தினை ஸ்ரீபதி ரெங்கசாமி என்பவர் இயக்க DAR மோசன் பிக்சர்ஸ் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் குழு இணைந்து தயாரிக்க உள்ளது. 

இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாப்பத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. முரளிதரன் விஜய் சேதுபதிக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். 2020ல் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 


Advertisement