சினிமா

தல அஜித்துடன் படம் நடிப்பீங்களா? விஜய் சேதுபதி சொன்ன அசத்தல் பதில்!

Summary:

Vijay sethupathi answer about movie with thala ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்ப படும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள்தான்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அதே போல இவர் நடித்த மல்டி ஸ்டார் படங்கள் அனைத்தும் பெரிதும் ஹிட் அடைந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் படமான பேட்ட படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் அஜித் ரசிகர்கள் தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, சான்ஸ் கொடுத்தா சந்தோஷம் என்று  விஜய் சேதுபதி பதிலளித்தார். இதனை கேட்டு ரசிகர்கள் அரங்கம் அதிர ஆராவாரம் செய்தனர்.  


Advertisement