தமிழகம் சினிமா

நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் முன்னணி தமிழ் நடிகை! யார் தெரியுமா?

Summary:

vijay sethupathi - new movie thuklag - samantha

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, த்ரிஷா இருவரும் ஏற்கெனவே ஜோடி சேர்ந்து நடித்து விட்ட நிலையில் தற்போது சமந்தாவும் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,  கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் தனது கடின உழைப்பால் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 100 வது நாள் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதில் பேசிய அவர் தனது அடுத்த படத்தை பற்றிய தகவலை வெளியிட்டார். அதாவது விஜய் சேதுபதி 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் துக்ளக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்க உள்ளார். மேலும் இது முழுமையான அரசியல் சார்ந்த படம் எனவும் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணீதரன் வசனம் எழுதுகிறார்.

தற்போது கூடுதல் தகவலாக முன்னணி நடிகை சமந்தாவும் விஜய் சேதுபதியுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இருவரும் ஒன்றாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தாலும், அதில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிப்பதால், அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் துக்ளக் படத்தில் இவர்கள் சேர்ந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


Advertisement