தமிழகம் சினிமா

துக்ளக் தர்பார் படத்தில் பிரமிக்கவைக்கும் விஜய்சேதுபதி! அரசியல் தோற்றத்தில் அசத்தல்!

Summary:

vijay sethubathi in thuklak tharbar


சமீப காலமாக ஹீரோ, வில்லன் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பெண் ரசிகர்கள் ஏராளம். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார்.


இந்த படத்திற்கு 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 96 படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். மேலும் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 

 இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளதாகவும், கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது.
இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


Advertisement