விஜய்சேதுபதிக்கு என்னாச்சு! மகனை ஏன் இப்படி அடித்து வெளுத்துகிறார்.! வைரலாகும் வீடியோ.!

vijay sethubathi and his son


vijay-sethubathi-and-his-son


ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்து வரும் படம் 'சிந்துபாத்'. வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியும் சூர்யாவும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.