ட்விட்டரையே ரூல் செய்த நடிகர் விஜய்யின் ஒத்த புகைப்படம்! இந்தியளவில் படைத்த சாதனை! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

ட்விட்டரையே ரூல் செய்த நடிகர் விஜய்யின் ஒத்த புகைப்படம்! இந்தியளவில் படைத்த சாதனை! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!



vijay-selfi-most-retweeted-image-in-2020

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தற்போது டுவிட்டர் இந்தியா 2020-ம் ஆண்டு நிறைவடையவிருக்கும்  நிலையில் இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக் மற்றும்  ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக விஜய் நெய்வேலி சென்றிருந்த நிலையில்,அங்குஅவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்பொழுது நடிகர் விஜய்  பேருந்து ஒன்றில் ஏறி நின்று ரசிகர்களுக்கு கைகாட்டி அவர்களுடன்  செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செஃல்பி இந்த ஆண்டின் அதிகம் ஷேர் செய்யப்பட்ட புகைப்படமாக தற்போது டுவிட்டர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 1 லட்சத்து45 ஆயிரம் நபர்கள் இந்த ட்வீட்டை ரீடுவிட் செய்துள்ளனர்.