சினிமா

ரசிகர்களின் தள்ளுமுள்ளினால் சரிந்து விழுந்த தடுப்பு வேலி! காப்பாற்ற ஓடிசென்று தாங்கி பிடித்த விஜய்.! வைரலாகும் வீடியோ.!

Summary:

vijay save the people from falling security wall

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றங்கள் உள்ளன. மேலும் அவரது ரசிகர்கள் விஜய் படம் வெளியாகும் நாளை திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து விஜய் 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

thalapathi 63 க்கான பட முடிவு
மேலும்  இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையை அடுத்த பின்னி மில்லில் விஜய் 63 படத்திற்கான  ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் விஜய்யை காண எப்பொழுதும் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விடுகின்றனர். மேலும் அவர்களை தினமும் விஜய் சந்தித்து கையசைத்து நன்றி தெரிவித்து விட்டு செல்வார்.

vijay with nayanthara க்கான பட முடிவு

இந்நிலையில் இன்றும் விஜய் தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்து கொண்டிருந்தார். அப்பொழுது   அதிக ரசிகர் கூட்டத்தால் மறைத்து வைத்திருந்த உயர்ந்த தடுப்பு சரிந்து விழுந்தது. அதை கண்ட விஜய் உடனே ஓடி சென்று அந்த தடுப்பு பலகையை பிடித்துள்ளார். மேலும் உடனே அவருக்கு அருகில் இருந்தவர்கள் விரைந்து விஜய்க்கு உதவியாக சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement