என்னது அடுத்த மாதம் விஜய் தேவர் கொண்டா - ராஷ்மிகா நிச்சயதார்த்தமா...

என்னது அடுத்த மாதம் விஜய் தேவர் கொண்டா - ராஷ்மிகா நிச்சயதார்த்தமா...



Vijay rashmika marriage news goes viral

பிரபல நடிகரான விஜய் தேவர் கொண்டாவும் ராஷ்மிகாவுக்கும் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் இறுதியில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் முக்கியமாக அர்ஜீன் ரெட்டி படம் இவரை பிரபலமாக்கியது. இளம் பெண்கள் மத்தியில் இவருக்கு என்று தனி கிரேஸ் உண்டு. எதையும் வித்தியாசமாக முயற்சிக்கும் நடிகர் என இவருக்கு பெயரும் உண்டு. கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

vijay

ராஷ்மிகா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார் . சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும்  நடிகை ராஷ்மிகா வீடியோக்களையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இதனை பற்றி இரு தரப்பினரும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் தேவர் கொண்டாவும் ராஷ்மிகாவும் கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் இறுதியில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருதரப்பினரும் வெளியிடவில்லை.