பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
அட..இந்த க்யூட் குட்டி குழந்தை அந்த விஜய் பட நடிகையா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
அட..இந்த க்யூட் குட்டி குழந்தை அந்த விஜய் பட நடிகையா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழில் 'முகமூடி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அரபிக் குத்து என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த பாடலில் இவரின் நடனம் ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறது.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை தழுவிவருகிறது. இவர் தமிழில் படங்களில் நடித்தால் தோல்வி அடைந்து விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பூஜா ஹெக்டேவில் க்யூட்டான குழந்தையின் புகைப்படம் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.