சினிமா

தளபதி படத்திற்கு சீனாவில் பயங்கர வரவேற்பு!! எத்தனை தேட்டர்களில் வெளிவரவுள்ளது தெரியுமா?

Summary:

Vijay-mersal-release-in-china-10000

ஜோசப் விஜய் இந்திய திரைப்பட உலகின் தளபதியாக திகழ்கிறார். இவர் படங்கள் எல்லாமே தற்போது சூப்பர் ஹிட்டாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வெளியான மெர்சல் படம் அதிக வசூலை தந்தது. இப்போது இந்த படம் சீனாவில் மொழிபெயர்ப்பு செய்து வெளியாக உள்ளது.

 

vijay mersal க்கான பட முடிவு

'மெர்சல்' திரைப்படம்  சீனாவில் 10,000 தியேட்டர்களில்  வெளியிட போகவதாக செய்திகள் வெளியாகின்றன.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மெர்சல்' திரைப்படம்,  உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டது. முதன்முதலாக விஜய் மூன்று வேடங்களில் நடித்த அந்தப் படத்தில், அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

vijay mersal க்கான பட முடிவு

ஜி.எஸ்.டி குறித்து பேசப்பட்டதால், சர்ச்சைகளைத் தாண்டி படம் பெரும் லாபம் ஈட்டியது. மேலும், 'மெர்சல்' ரிலீஸானபோது வெளிநாடுகளில் பிரிமியர் ஷோ பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. விஜய்க்கு மாஸ் படமாக அமைந்ததால், அடுத்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் அட்லிக்கே இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார், விஜய். 

இதற்கிடையே, சீனாவில் 10,000 தியேட்டர்களில் 'மெர்சல்' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்துவருகின்றன. சீனாவில் 40,000 தியேட்டர்களுக்கு மேல் இருக்கிறது. 
அதனால், ஹாலிவுட் படங்கள், பாலிவுட் படங்கள் என உலக சினிமா அனைத்தும் சீன சினிமா மார்க்கெட்டை குறிவைத்தே திரைப்படங்களை ரிலீஸ் செய்துவருகின்றன. 

அதே பாணியைப் பின்பற்றி, இப்போது 'மெர்சல்' திரைப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுவருகிறார் 'தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி. அமீர் கானின், 'டங்கல்', `சீக்கரட் சூப்பர் ஸ்டார்ஸ்' படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட திரைப்பட நிறுவனத்தின் வாயிலாக 'மெர்சல்'  படத்தை டப்பிங் செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த வருடம் டிசம்பர் 6-ம்தேதி, 'மெர்சல்' திரைப்படம் சீனாவில் உள்ள 10,000 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 


Advertisement