புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"தூத்துக்குடி மருத்துவனையில் உள்ள மக்களுக்கு உதவிய விஜயின் மக்கள் இயக்கம்!"
100 ஆண்டுகளில் இல்லாத அளவு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, கரை உடைந்து ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு தெருக்களில் ஓடி, வீடுகளையும் மூழ்கடித்துளளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் மூலம் அவரது தூத்துக்குடி ரசிகர்கள், வெள்ள பாதிப்பின் ஆரம்பத்தில் இருந்தே தூத்துக்குடி மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருக்கும் ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான பிரெட், பிஸ்கட், சானிடரி நாப்கின்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. முன்னதாக சென்னை வெள்ளத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நின்று உணவு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விஜயின் மக்கள் இயக்கம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.