சினிமா

நடிகர் விஜய் எனது அண்ணன் என்று கூறும் பிரபல நடிகர்...!

Summary:

vijay-is-my-brother

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிம்பு. இவர் தற்போது ஒரு பேட்டியில் என்னை பொறுத்தவரை சினிமாவில் எனக்கு அஜித் தான் மிகவும் பிடிக்கும் ஆனாலும் விஜய் எனக்கு அண்ணா மாதிரி தான் என்றும் கூறியுள்ளார். 

சிம்பு அன்றிலிருந்து அஜித் ரசிகராக தான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். திடீரென்று ஒரு நாள் தன்னை விஜய் ரசிகர் என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதி கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் சிம்புவிடம் பேட்டி ஒன்றில் கேட்டபோது விஜய் – அஜித் இருவரில் யாரை பிடிக்கும்? விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேட்டபோது, விஜய் அண்ணாவை எனக்கு பெர்சோனாலா தான் தெரியும். ஆனால் சினிமாவில் எனக்கு அஜித் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். நான் எப்பவும் வெளிப்படையாக தான் இருப்பேன் அது விஜய் அண்ணாவுக்கும் தெரியும் அவர் என்ன தப்பா நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அவருக்கும் நான் உண்மையாக தான் இருக்கிறேன் என்றும் மேலும் அவர் நன்றாக நடித்து வருகிறார் சமூக அக்கறையுள்ள படங்களில் நடித்து வருவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். 

நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். ஏதாவது விழாவில் பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். ஆனால் நாங்கள் இருவரும் நெருக்கம் ஆகவில்லை ஆனால் அவர் எனக்கு அண்ணா தான் என்றும் கூறியுள்ளார். 
 


Advertisement