
vijay in sarkar...
இலவச விளம்பரத்தின் எதிரொலி: 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்த 'சர்கார்' :
சர்கார் படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் குறியீடு ஒன்றை வைத்து பதிலடி கொடுத்துள்ளது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் படத்தை கொண்டாடிவந்த நிலையில் ஆளும் கட்சியினரை விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுத்ததை தொடர்ந்து, திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.
சர்கார் சர்ச்சை இத்துடன் முடிவடைந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இலவசங்களை தூக்கிப்போட்டு உடைப்பது மற்றும் எரிப்பது போன்ற வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து சர்ச்சையை கிளப்பினர் விஜய் ரசிகர்கள். ஃபர்ஸ்ட்லுக் தொடங்கி படம் வெளியான வரையில் சர்ச்சையுடன் நகர்ந்துகொண்டிருக்கும் சர்கார் திரைப்படம் தற்பொழுது புது சர்ச்சை ஒன்றை கிளப்பி வருகின்றது.
Sarkar team get together 🍽☑️ pic.twitter.com/XMXYnwcBnP
— A.R.Rahman (@arrahman) November 11, 2018
2 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் என பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை புரிந்த சர்கார் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் அவர்கள் வெட்டிய கேக்கில் மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை உள்ளது சமூகவலைதள வாசிகள் இடையே பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.சர்க்கார் -2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலின் உங்களின் கரத்தை கமெண்ட் செய்வோம்,
Advertisement
Advertisement